புதுச்சேரி
கதிர்காமம் தொகுதி எம்எல்ஏ அழகு அழகானந்தம் பிறந்தநாள்: வாழ்த்து தெரிவித்த ஜான்குமார்

புதுச்சேரி, ஆகஸ்ட் 13: புதுச்சேரி கதிர்காமம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. அழகு (எ) அழகானந்தம் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரை நேரில் சந்தித்து ஆரோக்கியம், நீண்ட ஆயுள் மற்றும் மக்கள் சேவை தொடர மனமார்ந்த வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டன.
இந்நிகழ்வில், முதலியார்பேட்டை தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் திரு. ஜான்குமார் அவர்கள் கலந்து கொண்டு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
மேலும், இந்த பிறந்தநாள் நன்னாளைச் சிறப்பிக்கும் வகையில், அந்தப் பகுதியின் ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு கோலாகலமாகத் தொடங்கி வைக்கப்பட்டது.
மேலும், புதுச்சேரி உள்துறை அமைச்சர் திரு. ஆ. நமச்சிவாயம் அவர்களும் கதிர்காமம் தொகுதி எம்எல்ஏ எஸ்.எஸ். அழகு (எ) அழகானந்தம் அவர்களை பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

