புதுச்சேரி

இலக்கியப் பணிக்கு கலைமாமணி கோ.பாரதிக்கு பாராட்டு

புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்ற 80-வது சுதந்திர தின விழாவில், கலைப் பண்பாட்டுத் துறை சார்பில் சிறப்பாக இலக்கியப் பணியாற்றி வரும் கலைமாமணி கோ. பாரதியின் இலக்கியப் பணியைப் பாராட்டி நினைவுப் பரிசும், சான்றிதழும் வழங்கப்பட்டது.

விழாவில் முதலமைச்சர் என். ரங்கசாமி கலந்துகொண்டு, கலைமாமணி கோ. பாரதிக்கு நினைவுப் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழை வழங்கி கவுரவித்தார்.

புதுச்சேரியின் இலக்கிய வளர்ச்சிக்கும், தமிழ் இலக்கியப் பணிக்கும் தொடர்ந்து பங்களித்து வரும் கோ. பாரதியின் சேவையைப் பாராட்டி இந்த கவுரவம் வழங்கப்பட்டது. விழாவில் அரசு அதிகாரிகள், கலைஞர்கள், இலக்கிய ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன