தமிழ்நாடு
சட்டப்பேரவையில் சௌம்யா அன்புமணியை சந்தித்த ஜோஸ் சார்லஸ் மார்ட்டின்
தமிழ்நாடு சட்டப்பேரவையில் தர்மபுரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திருமதி சௌம்யா அன்புமணியை, லட்சிய ஜனநாயகக் கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் நேரில் சந்தித்து கலந்துரையாடினார்.
இந்த மரியாதைச் சந்திப்பில், அவரது தாயார் மற்றும் லால்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினரான திருமதி லிமா ஜோஸ் மார்ட்டின் மற்றும் அவரது மனைவி சிந்து ஸ்ரீ சார்ல்ஸ் ஆகியோரும் உடன் இருந்தனர்.
சட்டப்பேரவை அமர்வு நடைபெறும் வேளையில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில், மாநில வளர்ச்சி, மக்கள்நல பிரச்னைகள் மற்றும் எதிர்கால அரசியல் இணைநிலைகள் தொடர்பாக நட்புறவுச் சூழலில் கருத்துப் பரிமாற்றம் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.
