புதுச்சேரி

சென்னையில் நள்ளிரவில் செவிலியர்கள் கைது செய்யப்பட்டதற்கு ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் கடும் கண்டனம்!

புதுச்சேரி:
சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அமைதியான முறையில் அறவழியில் போராட்டம் நடத்திய செவிலியர்கள் நள்ளிரவில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கு ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு மருத்துவமனைகள் மற்றும் சுகாதாரக் கட்டமைப்பில் தொடர்ந்து அயராது பணியாற்றி வரும் செவிலியர்களின் பணி நிரந்தரம், சம வேலைக்கு சம ஊதியம் மற்றும் உரிய பணிப் பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து நியாயமான கோரிக்கைகளையும் தமிழ்நாடு அரசு உடனடியாகப் பரிசீலித்து நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

மேலும், ஜனநாயக நாட்டில் தங்களின் வாழ்வாதார உரிமைக்காகப் போராடும் தொழிலாளர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களின் போராட்டங்களை ஒடுக்கி நசுக்கும் அணுகுமுறையைக் கைவிட வேண்டும் என்றும், செவிலியர்களின் நியாயமான உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவர்களுடன் நேரடிப் பேச்சுவார்த்தை நடத்தி சுமூகத் தீர்வு காண வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஏற்கனவே எழும்பூர் பகுதியில் யு.எச்.சி (UHC) திட்ட செவிலியர்கள் தங்களின் உழைப்பைச் சுரண்டாமல் பணி நிரந்தர அரசாணையை வெளியிடக் கோரி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் சூழலில், நள்ளிரவில் நடத்தப்பட்ட இந்த கைது நடவடிக்கை பொதுமக்களிடையேயும் மருத்துவத் துறையினரிடையேயும் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன