புதுச்சேரி

இமாச்சல மாணவர்கள் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதனை சந்திப்பு

‘ஏக் பாரதம், வளமான பாரதம்’ திட்டத்தின் கீழ் புதுச்சேரி வந்துள்ள இமாச்சலப் பிரதேச மாணவர்கள், துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதனை ஆளுநர் மாளிகையில் சந்தித்து கலந்துரையாடினர்.

காரைக்காலில் உள்ள தேசிய தொழில்நுட்ப நிறுவனம் (NIT) ஒருங்கிணைத்த இந்த நிகழ்ச்சியில் 60 மாணவர்கள் மற்றும் 5 ஆசிரியர்கள் பங்கேற்றனர். புதுச்சேரியின் கலாச்சாரம், கல்வி, உள்கட்டமைப்பு வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு வாய்ப்புகள் குறித்து துணைநிலை ஆளுநர் விளக்கமளித்தார்.

மேலும், இந்தியாவின் பல்வேறு மொழிகள், கலாச்சாரங்கள் மற்றும் சமூகங்களை புரிந்து கொண்டு மதிப்பளிக்க வேண்டும் என்றும், நாட்டின் வளர்ச்சியில் இளைஞர்கள் முக்கிய பங்காற்ற வேண்டும் என்றும் மாணவர்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன