தங்கத்தில் புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.1600 உயர்ந்து ரூ.1.16 லட்சத்தை கடந்தது!

புதுச்சேரி, ஆக. 19: தங்கம் விலை இன்று ஒரே நாளில் அதிரடியாக உயர்ந்துள்ளது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கத்தின் விலை, இன்று சவரனுக்கு ரூ.1,600 உயர்ந்துள்ளது நகைப்பிரியர்களுக்கு கவலையை அளித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.1,16,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.200 உயர்ந்து ரூ.14,600-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச சந்தையில் நிலவும் மாற்றங்கள் மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் காரணமாகவே இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக சந்தை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கத்தின் விலை, நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் திருமண சீசனை எதிர்பார்த்துள்ள குடும்பத்தினரின் திட்டமிடலை பாதித்துள்ளது.
தங்கம் விலை உயர்வு நீடிக்குமா அல்லது குறையுமா என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மற்றும் நகை வியாபாரிகள் மத்தியில் எழுந்துள்ளது.

