புதுச்சேரி

புதுச்சேரி வாழ் மலையாள மக்களுக்கு அமைச்சர் ஆ. நமச்சிவாயம் ஓணம் நல்வாழ்த்துகள்

புதுச்சேரி வாழ் மலையாள மக்களுக்கு ஆ. நமச்சிவாயம் ஓணம் வாழ்த்து

புதுச்சேரி, ஆக. 25: அன்பு, சகோதரத்துவம், ஒற்றுமை மற்றும் வளத்தைப் போற்றும் திருவிழாவாக ஓணம் கொண்டாடப்படுவதாகக் குறிப்பிட்டுள்ள ஆ. நமச்சிவாயம், புதுச்சேரி வாழ் மலையாள சகோதர, சகோதரிகளுக்கு இதயம் கனிந்த ஓணம் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், மகாபலி மன்னனின் சிறந்த ஆட்சியையும், அனைவரும் சமமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ வேண்டும் என்ற உயரிய எண்ணத்தையும் நினைவுகூரும் நாளாக ஓணம் விளங்குகிறது என்று தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த இனிய ஓணம் திருநாள் ஒவ்வொரு குடும்பத்திலும் மகிழ்ச்சி, அமைதி, ஆரோக்கியம், வளம் மற்றும் நலத்தை நிறைத்திட வேண்டும் என்றும், அனைவரது வாழ்விலும் புதிய நம்பிக்கையும் வெற்றியும் மலர வேண்டும் என்றும் அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

“அனைவருக்கும் இனிய ஓணம் திருநாள் நல்வாழ்த்துகள்” என ஆ. நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன