தமிழ்நாடு

சென்னை வடக்கு மண்டல பொருளாதார குற்றப்பிரிவு எஸ்.பி.யாக டாக்டர் ஆர்.ஸ்டாலின் ஐபிஎஸ் பொறுப்பேற்பு!

சென்னை:

கன்னியாகுமரி மாவட்டத்தில் மக்கள் மத்தியில் காவல்துறையின் நன்மதிப்பைப் பெற்றுத் தந்த திறமைமிக்க அதிகாரியான டாக்டர் ஆர்.ஸ்டாலின் ஐபிஎஸ், சென்னை பெருநகர வடக்கு மண்டல பொருளாதார குற்றப்பிரிவு காவல் கண்காணிப்பாளராக (SP) இன்று முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார்.

நேர்மையான நிர்வாகம் மற்றும் மக்கள் நலனில் மிகுந்த அக்கறை கொண்ட அதிகாரியான டாக்டர் ஆர்.ஸ்டாலின் ஐபிஎஸ், முன்னதாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பணியாற்றிய காலத்தில், பொதுமக்களிடையே காவல்துறையின் மீதான நம்பிக்கையையும் மதிப்பையும் பெருமளவில் உயர்த்தியவர் என்ற பாராட்டைப் பெற்றவர். குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பொதுமக்களின் புகார்களுக்கு உடனுக்குடன் தீர்வு காண்பதில் அவர் ஆற்றிய அர்ப்பணிப்பான சேவை மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

தற்போது சென்னை பெருநகர வடக்கு மண்டல பொருளாதார குற்றப்பிரிவு காவல் கண்காணிப்பாளராக புதிய பொறுப்பேற்றுள்ள அவர், பொதுமக்களை ஏமாற்றி நிதி மோசடியில் ஈடுபடும் நிதி நிறுவனங்கள், ஆன்லைன் பண மோசடிகள் மற்றும் சட்டவிரோத பொருளாதாரக் குற்றங்களைத் தடுத்து நிறுத்துவதில் தீவிர கவனம் செலுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏழை மற்றும் நடுத்தர மக்களின் சேமிப்புப் பணத்தை ஏமாற்றும் நிதி மோசடி கும்பல்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

புதிய பொறுப்பேற்றுள்ள டாக்டர் ஆர்.ஸ்டாலின் ஐபிஎஸ் அவர்களுக்கு காவல்துறை உயர் அதிகாரிகள், சக காவல்துறை நண்பர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன