புதுச்சேரி
அமித்ஷா பங்கேற்ற விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிப்பு: புதுச்சேரி திமுக கண்டனம்
புதுச்சேரியில் மத்திய உள் துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்ற காவலர் வண்ண விருது விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் தவிர்க்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய திமுக அமைப்பாளர் நாஜிம், கடந்த 55 ஆண்டுகளாக பாரதிதாசன் எழுதிய பாடல் தமிழ்த்தாய் வாழ்த்தாக பாடப்பட்டு வருவதாக சுட்டிக்காட்டினார். பாரதிதாசன் பாடலை புறக்கணித்த புதுச்சேரி அரசு மற்றும் காவல்துறை இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் தவறினால் பொதுமக்கள் திரண்டு போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
In brief (English)
Puducherry opposition leader Nazim expressed strong condemnation over the omission of Tamil Thai Vaazhthu during a official function attended by Union Home Minister Amit Shah. He demanded an explanation from the government and police department.


