தமிழ்நாடு
எம்எல்ஏக்களுக்கு இலவச கார் வேண்டாம்; கடன் உதவி வழங்கலாம்: சிபிஎம் தலைவர் சண்முகம்
தமிழ்நாட்டில் இதுவரை எந்த ஆட்சியிலும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இலவசமாக கார் வழங்கிய அறிவிப்பு வந்ததில்லை என்றும், இது முதல்முறை என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் தெரிவித்தார். பெரும்பாலான உறுப்பினர்கள் ஏற்கனவே சொந்த கார் வைத்திருக்கும் நிலையில், கார் வாங்கவே முடியாத நிலையில் உள்ளவர்களுக்கு மட்டும் கடன் உதவி வழங்க அரசு முன்வர வேண்டும் என்பதே தங்கள் கட்சியின் நிலைப்பாடு என்று அவர் விளக்கினார்.
கம்யூனிஸ்ட் கட்சியின் எம்எல்ஏக்களுக்கு கார் வேண்டாம் என்று தாங்கள் ஏற்கனவே தெரிவித்திருப்பதாகவும் சண்முகம் குறிப்பிட்டார்.
In brief (English)
CPI(M) state secretary Shanmugam has said the government should offer loan assistance only to MLAs who genuinely cannot afford a car, rather than giving free cars to all MLAs.