தமிழ்நாடு
சென்னை விமான நிலையத்தில் கோவா சென்ற விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: சோதனை
சென்னை, அக்டோபர் 20: சென்னையிலிருந்து கோவா புறப்பட தயாராக இருந்த விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து, பயணிகள் அனைவரும் இறக்கப்பட்டு நான்கு மணி நேரம் தீவிர சோதனை நடத்தப்பட்டது.
சோதனைக்குப் பிறகு இந்த மிரட்டல் வெறும் புரளி என தெரியவந்தது.


