புதுச்சேரி

உப்பளம் தொகுதி ஜெயராம் செட்டியார் தோட்டத்தில் பலத்த காற்றால் முறிந்து விழுந்த மரத்தை அப்புறப்படுத்திய தீயணைப்பு துறையினர்

புதுச்சேரி, அக்டோபர் 21: புதுச்சேரியில் பெய்த மழை மற்றும் அதிகாலை வீசிய பலத்த காற்று காரணமாக உப்பளம் தொகுதி ஜெயராம் செட்டியார் தோட்டம் இரண்டாவது தெருவில் மரம் முறிந்து விழுந்தது.

இச்சம்பவத்தில் சில வீடுகள் பாதிக்கப்பட்ட நிலையில், இது குறித்து தகவல் அறிந்த தற்காலிக சபாநாயகரும் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான அன்பழகன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டார். மேலும் அப்பகுதியில் மின் இணைப்பை துண்டிக்க அவர் அறிவுறுத்தியதுடன், தீயணைப்பு துறைக்கும் தகவல் தெரிவித்தார்.

இதனை அடுத்து அங்கு வந்த தீயணைப்பு துறையினர் மரமறுக்கும் இயந்திரம் மூலம் முறிந்து விழுந்த மரக்கிளைகளை அகற்றி அப்புறப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து சீரானதுடன், விரைந்து செயல்பட்ட தீயணைப்பு துறையினரை சபாநாயகர் அன்பழகன் பாராட்டினார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன