புதுச்சேரி
சுதந்திர தினத்தை முன்னிட்டு அம்பேத்கர் சிலைக்கு பாஜக இளைஞரணி மரியாதை
நாட்டின் 80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு புதுச்சேரி மாநில பாரதிய ஜனதா கட்சியின் இளைஞரணி சார்பில் தேசியத் தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இளைஞரணித் தலைவர் ஆடலரசன் மற்றும் நகர மாவட்டத் தலைவர் கிருஷ்ணராஜ் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், சட்டமேதை அம்பேத்கர் திருவுருவச் சிலை மற்றும் கார்கில் போர் நினைவுச் சின்னத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் நகர மாவட்ட இளைஞரணி பொதுச்செயலாளர் ஜெகன், துணைத் தலைவர் பிரசாத், மண்டலத் தலைவர் சரவணன், மகளிர் அணி தலைவி அனுராதா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
In brief (English)
Puducherry BJP Youth Wing office-bearers garlanded the statue of Dr B.R. Ambedkar and paid homage at the Kargil War Memorial ahead of Independence Day.
