ஆதிதிராவிடர், பழங்குடியின விவசாயிகளுக்கு அண்ணல் அம்பேத்கர் வேளாண் உதவி திட்டம்
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகள் உயர் மதிப்பு வேளாண் திட்டங்களில் பயனடைய அண்ணல் அம்பேத்கர் வேளாண் உதவித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் 20 சதவீத கூடுதல் மானியம் வழங்கப்படுவதுடன், ஒருங்கிணைந்த பண்ணையம், பசுமை குடில்கள், சூரிய சக்தி பம்ப் செட்டுகளுக்கு 70% முதல் 80% வரை மானியம் அளிக்கப்பட்டும். மேலும் நீர்ப்பாசன வசதியில்லாத 300 ஆதிதிராவிட, பழங்குடியின விவசாயிகளுக்கு 100% மானியத்தில் ஆழ்துளைக் கிணறுகள் அமைத்துத் தரப்படும். 2026-27 நிதியாண்டில் இத்திட்டத்திற்காக 56 கோடியே 72 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
In brief (English)
The Tamil Nadu government has announced the Annal Ambedkar Agriculture Assistance Scheme with an allocation of Rs 56.72 crore to support SC and ST farmers. The scheme provides up to 80% subsidy on equipment and 100% subsidy on borewells for eligible farmers.