புதுச்சேரியில் ஆகஸ்ட் 1 முதல் அக்னிவீரர் ராணுவ ஆட்சேர்ப்பு முகாம்: மைதான சீரமைப்பு தீவிரவிகம்
புதுச்சேரி உப்பளம் இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தில் வரும் ஆகஸ்ட் 1 முதல் 10-ஆம் தேதி வரை அக்னிவீரர் ராணுவ ஆட்சேர்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் புதுச்சேரி மற்றும் சென்னை, செங்கல்பட்டு, வேலூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களைச் சேர்ந்த தேர்வர்கள் பங்கேற்கின்றனர். மேலும் சிப்பாய் ஃபார்மா, நர்சிங் உதவியாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு ஆந்திரா, தெலுங்கானா, தமிழகத் தேர்வர்களும் கலந்து கொள்ள உள்ளனர். நாளொன்றுக்கு சுமார் 1,000 பேருக்கு உடல்தகுதி மற்றும் மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட உள்ளன. இதனை முன்னிட்டு மைதானத்தை சீரமைத்தல் மற்றும் பந்தல் அமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சியர் குளோத்துங்கன் உத்தரவின் பேரில் அதிகாரிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
In brief (English)
The Agniveer Army Recruitment Rally is scheduled to take place at the Indira Gandhi Sports Stadium in Puducherry from August 1 to 10. Candidates from Puducherry and 11 surrounding districts will participate in physical and medical tests daily.