தமிழ்நாடு

எடப்பாடி பழனிசாமியுடன் அதிமுக நட்சத்திரப் பேச்சாளர்கள் சந்திப்பு: தேர்தல் பிரச்சாரத்திற்கு வாழ்த்துப் பெற்றனர்!

சென்னை: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்களை ஆதரித்து தீவிரப் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக, கழக நட்சத்திரப் பேச்சாளர்கள் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

அதிமுக கலைப் பிரிவுச் செயலாளரும் திரைப்பட இயக்குநருமான நாஞ்சில் பி.சி.அன்பழகன் தலைமையில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில், தலைமைக் கழக நட்சத்திரப் பேச்சாளர்களான முன்னாள் அரசவைக் கவிஞரும் திரைப்படப் பாடலாசிரியருமான கவிஞர் முத்துலிங்கம், திரைப்பட இயக்குநரும் நடிகருமான சி. ரங்கநாதன், இயக்குநர் அனுமோகன், நடிகையும் பிரபல பின்னணிப் பாடகியுமான டி.கே. கலா மற்றும் நடிகை பபிதா ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேலும், திரைப்பட இயக்குநர் டாக்டர் வீ. ஜெயப்பிரகாஷ், நடிகர்கள் வி.எம். சுப்புராஜ், கிங்காங், காதல் சுகுமார், எம். விஜய் கணேஷ் மற்றும் நடிகர்-இயக்குநர் பி. சௌந்தரராஜன் ஆகியோர் பொதுச்செயலாளரை நேரில் சந்தித்து தேர்தல் களத்தில் முழுவீச்சில் களப்பணியாற்ற ஆசி பெற்றனர். இதனைத் தொடர்ந்து தேர்தல் பிரச்சார வியூகங்கள் மற்றும் பொதுமக்களை கவரும் வகையிலான கலைப் பிரச்சாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன