சட்டமன்ற இடைத்தேர்தல்: பாஜக ஆதரவு கோரி கமலாலயத்தில் அதிமுக மூத்த நிர்வாகிகள் கடிதம்!

சென்னை: தமிழகத்தில் வரவிருக்கும் சட்டமன்ற இடைத்தேர்தலில் அஇஅதிமுகவிற்கு பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவைக் கோரி, அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் சென்னை கமலாலயத்தில் ஆதரவு கோரும் கடிதத்தை முறைப்படி வழங்கினர்.
சென்னை தியாகராய நகரில் உள்ள தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்திற்கு அஇஅதிமுக சார்பில் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்களான கே.பி. முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், ஓ.எஸ். மணியன், அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி மற்றும் சொரத்தூர் ராஜேந்திரன் ஆகியோர் நேரில் வருகை தந்தனர்.
அங்கு தமிழக பாஜக தலைவர் திரு. நயினார் நாகேந்திரன் தலைமையிலான நிர்வாகிகளைச் சந்தித்த அதிமுக குழுவினர், வரவிருக்கும் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளருக்கு பாஜக முழு ஆதரவு அளிக்க வேண்டும் என வலியுறுத்தி அதிகாரப்பூர்வ கடிதத்தை சமர்ப்பித்தனர். இந்த சந்திப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.



