புதுச்சேரி

டிபிஐ புதுச்சேரி மாநில தலைவராக எம்.ஆர். மணிகண்டன் நியமனம்: பூனே தலைமை அலுவலகத்தில் தேசிய தலைவர் ஆணை வழங்கல்

புதுச்சேரி, அக். 21:
தலித் பேந்தர் ஆப் இந்தியா (டிபிஐ) அமைப்பின் புதுச்சேரி மாநில புதிய தலைவராக எம்.ஆர். மணிகண்டன் அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

மகாராஷ்டிர மாநிலம் பூனேயில் உள்ள தலித் பேந்தர் ஆப் இந்தியா கட்சியின் தேசிய தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், கட்சியின் தேசியத் தலைவர் போஸ்லேவிடமிருந்து தனது நியமன ஆணையை எம்.ஆர். மணிகண்டன் முறைப்படி நேரில் பெற்றுக்கொண்டார்.

புதிய பொறுப்பேற்பு குறித்து புதுச்சேரி மாநில தலைவர் எம்.ஆர். மணிகண்டன் தெரிவிக்கையில், “இந்தியாவில் ஒடுக்கப்பட்ட, விளிம்புநிலை மக்களின் அடிப்படை உரிமைகளுக்காகவும் சமூக நீதிக்காகவும் சமரசமின்றி தொடர்ந்து குரல் கொடுத்து வரும் வரலாற்றுச் சிறப்புமிக்க பேரியக்கமாக தலித் பேந்தர் ஆப் இந்தியா செயல்பட்டு வருகிறது.

அந்த வகையில், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களின் நலன்களைப் பாதுகாக்கவும், எந்தவொரு சமூகத்தினர் பாதிக்கப்பட்டாலும் அவர்களின் பக்கம் நின்று நீதி பெற்றுத் தரவும் டிபிஐ இயக்கம் புதுவையில் முழு வீச்சில் களமிறங்கி செயல்படும்” என்று உறுதியளித்தார். புதிய மாநில தலைவராக நியமிக்கப்பட்டுள்ள மணிகண்டனுக்கு கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன