புதுச்சேரி

புதுவையில் அடுத்த மூன்று நாட்களுக்கு மிதமானது முதல் கனமழை பெய்ய வாய்ப்பு

புதுச்சேரி, அக்டோபர் 20: வடகிழக்கு பருவமழை தொடங்கி தீவிரமடைந்துள்ள நிலையில், புதுச்சேரியில் அடுத்த மூன்று நாட்களுக்கு மிதமானது முதல் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புதுவையில் கடந்த ஜூன் மாதம் முதல் வெயிலின் தாக்கம் வழக்கத்தை விட அதிகமாக காணப்பட்ட நிலையில், தினசரி வெப்பநிலை 102 டிகிரி முதல் 105 டிகிரி வரை பதிவானது. கடலோர பகுதி என்பதால் புழுக்கமும் அணல் காற்றும் மக்களை வாட்டி வதைத்த நிலையில், கடந்த இரு தினங்களாக வானிலை முற்றிலும் மாறியுள்ளது. புதுச்சேரி முழுவதும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. சாரல் மழையுடன் சில்லென்ற காற்று வீசுவதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவும் குறைந்த காற்றெழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றெழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெற வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக புதுவை, கடலூர், விழுப்புரம், சென்னை உள்ளிட்ட வடதமிழக கடலோர மாவட்டங்களில் அடுத்த மூன்று நாட்களுக்கு மிதமானது முதல் கனமழை வரை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மழையை எதிர்கொள்ள புதுச்சேரி மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன