புதுச்சேரி குயவர்பாளையம் முத்துக்குமாரசுவாமி ஆலயத்தில் விமரிசையாக நடைபெற்ற நவராத்திரி திருவிழா
புதுச்சேரி, அக்டோபர் 19: புதுச்சேரி குயவர்பாலத்தில் அமைந்துள்ள முத்து விநாயகர் செல்வமுத்துக்குமார சுவாமி ஆலயத்தில் 25ஆம் ஆண்டு நவராத்திரி திருவிழா விமரிசையாக நடைபெற்று வருகிறது.
பராபவ வருட நவராத்திரி விழா அமாவாசை தினத்தன்று கலச ஸ்தாபனத்துடன் தொடங்கியது. விழாவின் முதல் நாளில் அம்பாள் பாலசுந்தரி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் சண்டி ஹோமங்கள் நடைபெற்றன. மேலும், இந்த ஆலயத்தில் கடந்த 25 ஆண்டுகளாக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு குழந்தையை கொழுவில் அமர வைத்து பாத பூஜை செய்து சுமங்களி தாம்பளம் வழங்கும் சிறப்பு வழிபாட்டு முறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. விழாவின் ஏழாம் நாளில் அன்னபூரணி அலங்காரத்தில் அம்மன் காட்சியளித்த நிலையில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாக அதிகாரி டாக்டர் குமரன் மற்றும் அர்ச்சகர்கள் செய்திருந்தனர்.