புதுச்சேரி

புதுச்சேரி பாண்டி மெரினா கடற்கரையில் 1,000 பனை விதைகள் நடும் பணி தீவிரம்!

உலகத் தமிழர்களின் வாழ்வியல் மற்றும் கலாச்சாரப் பண்பாட்டு அடையாளமாக விளங்கும் பனை மரங்களைப் பாதுகாக்கவும், கடற்கரைப் பகுதியின் சுற்றுச்சூழல் சமநிலையை மேம்படுத்தவும் பனை மரம் மீட்பு இயக்கம் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, பூரணாங்குப்பம் தனசுந்தராம்பாள் சாரிடேபிள் சொசைட்டி மற்றும் பீயிங் பாண்டிச்சேரி பவுண்டேஷன் இணைந்து, சென்னை எம்.என். காயத்திரி சாரிடீஸ் அமைப்பின் ஆதரவுடன் பாண்டி மெரினா கடற்கரை பகுதியில் 1,000 பனை விதைகள் நடும் பணியை முன்னெடுத்தன.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பனை விதை நடும் பணியைத் தொடங்கி வைத்தார். மேலும், பி.பி.டபிள்யூ.எஸ் மகளிர் குழுத்தலைவி கலாவிசு குழுவினர், முன்னாள் ராணுவ வீரர் வெட்ரன் ராமமூர்த்தி, மீனவம் காப்போம் குழுவைச் சேர்ந்த செல்வம் உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதற்கான ஏற்பாடுகளை தனசுந்தராம்பாள் சாரிடேபிள் சொசைட்டி தலைவர் பூரணாங்குப்பம் “பனை” ஆனந்தன் மற்றும் பீயிங் பாண்டிச்சேரி பவுண்டேஷன் தலைவர் சிவக்குமார் ஆகியோர் தலைமையிலான குழுவினர் சிறப்பாகச் செய்திருந்தனர். பாண்டி மெரினா கடற்கரையின் கலங்கரை விளக்கம் (Light House) சுற்றுவட்டாரப் பகுதிகளில் இந்த 1,000 பனை விதைகள் நடவு செய்யப்பட்டன.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன