புதுச்சேரி

புதுச்சேரியில் காமராஜர் நினைவு நாள்: ஆளுநர், முதல்வர் ரங்கசாமி மற்றும் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் மலரஞ்சலி!

புதுச்சேரி:

கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் கர்மவீரர் காமராஜரின் நினைவு நாளை முன்னிட்டு, புதுச்சேரியில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு துணைநிலை ஆளுநர், முதலமைச்சர், தற்காலிக சபாநாயகர் மற்றும் உள்துறை அமைச்சர் உள்ளிட்ட தலைவர்கள் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

புதுச்சேரி அண்ணாசாலை மற்றும் காமராஜர் சாலை சந்திப்பு சதுக்கம் அருகே அமைந்துள்ள கர்மவீரர் பெருந்தலைவர் காமராஜர் திருவுருவச் சிலைக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் மாண்புமிகு துணைநிலை ஆளுநர் திரு. கே. கைலாசநாதன் அவர்கள் மற்றும் மாண்புமிகு முதலமைச்சர் திரு. ந. ரங்கசாமி ஆகியோர் நேரில் வருகை தந்து காமராஜரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து, மாண்புமிகு தற்காலிக சபாநாயகர் திரு. அன்பழகன் மற்றும் மாண்புமிகு உள்துறை அமைச்சர் திரு. ஆ. நமச்சிவாயம் ஆகியோரும் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து, அவரது தன்னலமற்ற மக்கள் சேவையையும் தியாக வாழ்வையும் போற்றி வணங்கினர்.

இந்நிகழ்ச்சியில் புதுச்சேரி அரசின் மாண்புமிகு அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு உயர் அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலர் திரளாகக் கலந்து கொண்டு காமராஜரின் திருவுருவப் படத்திற்கும் சிலைக்கும் மலர் தூவி தங்களது மரியாதையைச் செலுத்தினர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன