புதுச்சேரி

புதுச்சேரி, திருச்சி ரயில் நிலையங்களில் ‘தூய்மையே சேவை’ விழிப்புணர்வு: பயணிகளுக்கு துண்டு பிரசுரங்கள் விநியோகம்!

புதுச்சேரி: ‘தூய்மையே சேவை’ (Swachhata Hi Seva) மக்கள் இயக்கத்தின் ஒரு பகுதியாக, புதுச்சேரி மற்றும் திருச்சி ரயில் நிலையங்களில் பயணிகளுக்கு சுகாதாரம் மற்றும் முறையான கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

திருச்சி ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட புதுச்சேரி ரயில் நிலையம், திருச்சி சந்திப்பு (Tiruchchirappalli Junction) மற்றும் திருச்சி கோட்டை (Tiruchchirappalli Fort) ஆகிய முக்கிய ரயில் நிலையங்களில் இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது. ரயில் நிலையத்திற்கு வருகை தந்த பயணிகள் மற்றும் ரயில்களில் பயணம் செய்த பொதுமக்களிடம் ரயில்வே அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் நேரடியாக துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இந்த விழிப்புணர்வு இயக்கத்தின் போது, ரயில் நிலைய வளாகங்கள், நடைமேடைகள் மற்றும் ரயில் பெட்டிகளைத் தூய்மையாகப் பராமரிப்பது குறித்த ஆலோசனைகள் வழங்கப்பட்டன. பயணிகள் தாங்கள் பயன்படுத்தும் பிளாஸ்டிக் கழிவுகள், உணவுப் பொட்டலங்கள் உள்ளிட்ட குப்பைகளை பொது இடங்களில் வீசாமல், அதற்கென வைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டிகளில் மட்டுமே போட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

மேலும், தூய்மையான மற்றும் சுகாதாரமான பயணச் சூழலை உருவாக்குவதில் பொதுமக்களின் பங்கு மிக அவசியமானது என்றும், ரயில்வே நிர்வாகம் மேற்கொள்ளும் தூய்மைப் பணிகளுக்கு பயணிகள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன