புதுச்சேரி

புதுச்சேரி கடற்கரையில் பிரதமர் மோடியின் சாதனைகளை விளக்கும் வீதி நாடகம்: பாஜக தேசிய அமைப்பாளர் பி.எல்.சந்தோஷ் தொடக்கி வைத்தார்!

புதுச்சேரி: பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் 25 ஆண்டுகால மக்கள் சேவையை போற்றும் வகையில், ‘சேவா சங்கல்ப அபியான்’ (Seva Sankalp Abhiyaan) இயக்கத்தின் ஒரு பகுதியாக புதுச்சேரி மாநில பாரதிய ஜனதா கட்சி சார்பில் சிறப்பு விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது. புதுவை கடற்கரை காந்தி சிலை அருகில் மத்திய அரசின் சாதனைகள் மற்றும் மக்கள் நலத் திட்டங்களை விளக்கும் வீதி நாடகம் துவக்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய அமைப்பாளர் திரு. பி.எல். சந்தோஷ் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, விழிப்புணர்வு வீதி நாடகப் பிரச்சாரத்தை முறைப்படி தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் புதுச்சேரி பாஜக நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

மத்திய அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு மக்கள் நலத் திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்து பொதுமக்கள் மத்தியில் எளிய முறையில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும். இந்த மக்கள் நலத் திட்டங்களின் பயன்கள் புதுச்சேரியின் கடைகோடி மனிதரையும் முழுமையாகச் சென்றடையும் வரை பாஜகவின் இந்த சேவை இயக்கம் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன