காரைக்கால்
பண்டிட் தீன்தயாள் உபாத்யாயின் 110-வது பிறந்தநாள்: காரைக்காலில் எம்.எல்.ஏ. டிகேஎஸ்எம். மீனாட்சிசுந்தரம் மலரஞ்சலி!

காரைக்கால்: பாரதிய ஜன சங்கத்தின் தலைவரும், மகத்தான தேசிய சிந்தனையாளருமான ஸ்ரீ பண்டிட் தீன்தயாள் உபாத்யாய் அவர்களின் 110-வது பிறந்தநாள் காரைக்காலில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
இதனையொட்டி காரைக்கால் பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த பண்டிட் தீன்தயாள் உபாத்யாயின் திருவுருவப் படத்திற்கு, சட்டமன்ற உறுப்பினர் திரு. TKSM. மீனாட்சிசுந்தரம், MLA அவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்வில் கட்சி நிர்வாகிகள், முக்கியப் பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் பலர் உடனிருந்து பண்டிட் தீன்தயாள் உபாத்யாயின் உருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தி அவரது தேசப்பணியை நினைவுகூர்ந்தனர்.



