புதுச்சேரி பாஜக தலைமை அலுவலகத்தில் பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா பிறந்தநாள் அனுசரிப்பு!

புதுச்சேரி: பாரதிய ஜனசங்கத்தின் முன்னாள் தலைவரும், நாட்டின் சிறந்த சிந்தனையாளருமான பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா அவர்களின் பிறந்தநாள் புதுச்சேரியில் பாஜக சார்பில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
இதனை முன்னிட்டு, புதுச்சேரி பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகத்தில் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாநிலத் தலைவர் வி.பி. ராமலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாநில நிர்வாகிகள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கிய கட்சி நிர்வாகிகள் திரளாகக் கலந்து கொண்டனர். அப்போது பேசிய தலைவர்கள், பண்டிட் தீன்தயாள் உபாத்யாயாவின் தேசப்பற்று, அவரது மக்கள் நல சிந்தனைகள் மற்றும் ஏழை எளிய மக்களுக்கான தொண்டுகளை நினைவுகூர்ந்து பெருமிதத்துடன் போற்றினர்.



