Uncategorized

நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவக் கனவை எட்டிய காரைக்கால் அரசுப் பள்ளி மாணவி: அமைச்சர் நமச்சிவாயம் நேரில் பாராட்டு!

புதுச்சேரி: காரைக்கால் அரசுப் பள்ளியில் பயின்று தேசிய அளவிலான நீட் (NEET) தேர்வில் சிறப்பான வெற்றி பெற்று, மருத்துவக் கல்லூரியில் சேரும் தனது கனவை நனவாக்கியுள்ள கிராமப்புற மாணவிக்கு புதுச்சேரி உள்துறை அமைச்சர் ஆ. நமச்சிவாயம் நேரில் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்.

காரைக்கால் மாவட்டம் காக்காமொழி கிராமத்தைச் சேர்ந்த மாணவி செல்வி யோகலட்சுமி, அரசுப் பள்ளியில் படித்து நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். கடின உழைப்பால் சாதித்த இம்மாணவியை நேரில் அழைத்த உள்துறை அமைச்சர் ஆ. நமச்சிவாயம், அவருக்குப் பொன்னாடை அணிவித்து, மலர்க்கொத்து வழங்கி தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

இந்நிகழ்வின் போது நிரவி–திருப்பட்டினம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டி.கே.எஸ்.எம். மீனாட்சி சுந்தரம், நெடுங்காடு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வி. விக்னேஸ்வரன் ஆகியோர் உடனிருந்து மாணவியின் கல்விப் பயணத்திற்கு வாழ்த்து தெரிவித்தனர். அரசுப் பள்ளி மாணவர்கள் விடாமுயற்சியுடன் படித்தால் மருத்துவக் கனவை எளிதில் எட்ட முடியும் என்பதற்கு மாணவி யோகலட்சுமியின் வெற்றி சிறந்த முன்னுதாரணம் எனப் பாராட்டப்பட்டது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன