புதுச்சேரி

புதுச்சேரி: காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள் – துணைநிலை ஆளுநர், எம்.எல்.ஏ அய்யப்பன் வழங்கினர்!

புதுச்சேரி: மத்திய அரசின் ‘காசநோய் இல்லா பாரத இயக்கம்’ (TB Mukt Bharat Abhiyaan) திட்டத்தின் கீழ், புதுச்சேரி முருங்கப்பாக்கம் ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திர் மையத்தில் (AAM Centre) காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்து உணவுப் பெட்டகங்கள் வழங்கும் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை நேரில் வழங்கினார். மேலும் இந்நிகழ்வில் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன் உடனிருந்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

காசநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் உரிய சிகிச்சை பெற்று விரைவாக குணமடையவும், அவர்களின் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும் இத்தகைய ஊட்டச்சத்து உதவிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன. காசநோயை முற்றிலும் ஒழிக்கும் நோக்கில் அரசு எடுத்து வரும் இந்த நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் மற்றும் பயனாளிகள் தங்களது பாராட்டுக்களை தெரிவித்தனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன