காரைக்கால்

காரைக்கால் நிரவியில் புதிய மேல்நிலை மின்பாதை திட்டம்: உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் அடிக்கல் நாட்டி தொடக்கம்!

காரைக்கால்: காரைக்கால் மாவட்டம் நிரவி பகுதியில் மின்துறை சார்பில் புதிதாக அமைக்கப்பட உள்ள மேல்நிலை மின்பாதைத் திட்டத்திற்கு புதுச்சேரி உள்துறை அமைச்சர் ஆ. நமச்சிவாயம் அடிக்கல் நாட்டி பணிகளைத் தொடங்கி வைத்தார்.

காரைக்கால் மாவட்டம், நிரவி இயக்கம் மற்றும் பராமரிப்பு (O&M) மின்சாரப் பிரிவு எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மின் விநியோகக் கட்டமைப்பை வலுப்படுத்தவும், சீரான மின்சார விநியோகத்தை உறுதி செய்யவும் மின்துறை சார்பில் புதிய மேல்நிலை மின்பாதை அமைக்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதற்கான தொடக்க விழா நிரவி பகுதியில் நடைபெற்றது. இதில் புதுச்சேரி உள்துறை மற்றும் மின்துறை அமைச்சர் ஆ. நமச்சிவாயம் தலைமை தாங்கி, புதிய மேல்நிலை மின்பாதை திட்டத்திற்கு அடிக்கல் நாட்டி பணிகளை முறைப்படி தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் புதுச்சேரி வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் ஜி.என்.எஸ். ராஜசேகரன், நிரவி–திருப்பட்டினம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டி.கே.எஸ்.எம். மீனாட்சி சுந்தரம், நெடுங்காடு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வி. விக்னேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் மின்துறை அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாகப் பங்கேற்றனர். இத்திட்டம் நிறைவடையும் போது நிரவி மற்றும் சுற்றுவட்டார கிராமப்புற மக்கள் தடையற்ற மின்சார வசதியைப் பெறுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன