புதுச்சேரி

மழைக்காலத்திற்கு முன் உப்பனாறு வாய்க்கால் மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் நேரில் ஆய்வு!

புதுச்சேரி: புதுச்சேரியில் பருவமழை தொடங்குவதற்கு முன்பாக உப்பனாறு வாய்க்கால் மேம்பாலக் கட்டுமானப் பணிகளைப் போர்க்கால அடிப்படையில் விரைந்து முடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என லட்சிய ஜனநாயகக் கட்சி (LJK) சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

புதுச்சேரி உப்பனாறு வாய்க்கால் பகுதியில் நடைபெற்று வரும் மேம்பாலப் பணிகளை ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் உள்ளிட்ட லட்சிய ஜனநாயகக் கட்சியின் நிர்வாகிகள் நேரில் சென்று பார்வையிட்டு கள ஆய்வு மேற்கொண்டனர். மழைக்காலம் தொடங்கினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மற்றும் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதால், பணிகளைத் துரிதப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

இந்த ஆய்வின் போது, லட்சிய ஜனநாயகக் கட்சியின் நிர்வாகப் பொதுச்செயலாளர் திரு. ராம்குமார் மற்றும் முக்கிய கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர். பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு பொதுப்பணித்துறை உள்ளிட்ட அரசுத் துறைகள் இப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்ளப்பட்டது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன