புதுச்சேரி

புதுச்சேரியில் கிராமப்புற ஏரிக்கரைகளில் பனை விதைகள் நடும் பசுமை இயக்கம்: எம்பலம் பள்ளி மாணவர்கள் ஆர்வம்!

புதுச்சேரி, செப். 21:
புதுச்சேரி மாநிலம் எம்பலம் மறைமலையடிகள் அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் புதுச்சேரி ரோட்டரி பீச் டவுன் சங்கம் இணைந்து பல்வேறு கிராமங்களில் பனை விதைகள் நடும் பசுமை விழிப்புணர்வு இயக்கத்தை முன்னெடுத்துள்ளன.

எம்பலம் மறைமலையடிகள் அரசு மேல்நிலைப் பள்ளியின் சமுதாய நலப்பணித் திட்டம் (NSS) மற்றும் ரோட்டரி பீச் டவுன் சங்கம் சார்பில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும், மண் அரிப்பைத் தடுக்கவும் பனை விதைகள் நடப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக சிவராந்தகம் அரியூர் ஏரிக்கரை, நல்லாத்தூர், மேலக்குப்பம், தென்னாம்பாக்கம், செம்பியப்பாளையம் மற்றும் கோர்காடு ஆகிய கிராமப்புறப் பகுதிகளில் தீவிரமாகப் பனை விதைகள் நடும் பணி நடைபெற்றது.

செம்பியப்பாளையம் கிராமத்தில் நடைபெற்ற பனை விதை நடும் நிகழ்ச்சிக்கு ரோட்டரி பீச் டவுன் துணை ஆளுநர் புருஷோத்தமன் மற்றும் பள்ளி துணை முதல்வர் வில்சன் ஆகியோர் தலைமை தாங்கினர். ரோட்டரி பீச் டவுன் தலைவர் தேவராஜ் மகாதேவன், செயலாளர் பிரகாஷ், பொருளாளர் ராம்குமார், புதுச்சேரி போக்குவரத்துக் கழகக் காப்பாளர் சண்முகம் மற்றும் சமூக ஆர்வலர் அபினேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்ச்சியில் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு ஏரிக்கரைகள் மற்றும் நீர்நிலைப் பகுதிகளில் பனை விதைகளை நட்டனர். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் சமுதாய நலப்பணித் திட்ட ஆசிரியர் ஜானகிராமன் சிறப்பாகச் செய்திருந்தார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன