தமிழ்நாடு

உளுந்தூர்பேட்டை பரிக்கல் லட்சுமி நரசிம்மர் கோயிலில் ரஜினிகாந்த் மகள் சவுந்தர்யா – விசாகன் சிறப்பு வழிபாடு!

உளுந்தூர்பேட்டை: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பிரசித்தி பெற்ற பரிக்கல் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் சுவாமி திருக்கோயிலில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகளும் திரைப்பட இயக்குநருமான சவுந்தர்யா மற்றும் அவரது கணவர் விசாகன் ஆகியோர் சுவாமி தரிசனம் செய்தனர்.

பரிக்கல் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கோயில் கடன் நிவர்த்தி மற்றும் மன அமைதி தரும் ஆன்மீகத் தலமாகப் பக்தர்களால் போற்றப்படுகிறது. இந்நிலையில், நேற்று இக்கோயிலுக்கு வருகை தந்த சவுந்தர்யா – விசாகன் தம்பதியினர் மூலவர் லட்சுமி நரசிம்மர் மற்றும் தாயாருக்கு நடைபெற்ற சிறப்பு அர்ச்சனை மற்றும் வழிபாடுகளில் கலந்துகொண்டு பயபக்தியுடன் சுவாமி தரிசனம் மேற்கொண்டனர்.

கோயிலுக்கு வந்த ரஜினிகாந்தின் மகள் மற்றும் மருமகனுக்குத் திருக்கோயில் அர்ச்சகர்கள் மற்றும் நிர்வாகிகள் சார்பில் சிறப்பு மரியாதை அளிக்கப்பட்டு, பிரசாதங்கள் வழங்கப்பட்டன. முக்கியப் பிரமுகர்களின் வருகையைத் தொடர்ந்து கோயிலில் கூடியிருந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அவர்களுடன் ஆர்வத்துடன் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன