தர்மபுரி அரசு மருத்துவமனையில் லட்சிய ஜனநாயக கட்சி சார்பில் ரத்ததான முகாம்: ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் துவக்கி வைத்தார்

தர்மபுரி: தர்மபுரி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், லட்சிய ஜனநாயக கட்சியின் (LJK) சார்பில் மாபெரும் ரத்ததான முகாம் சிறப்பாக நடைபெற்றது. இம்முகாமினை கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் நேரில் கலந்துகொண்டு முறைப்படி தொடங்கி வைத்தார்.
‘உயிரைக் காப்போம் – உறவை வளர்ப்போம்’ என்ற உன்னத நோக்கத்தை முன்னிறுத்தி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த ரத்ததான முகாமில், லட்சிய ஜனநாயக கட்சியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று ரத்ததானம் செய்தனர். அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை மற்றும் பிரசவ பிரிவுகளில் சிகிச்சை பெறும் ஏழை எளிய நோயாளிகளுக்கு உதவும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
முகாமிற்கான சிறப்பான ஏற்பாடுகளை தர்மபுரி மாவட்டச் செயலாளர் எஸ். கார்த்தி முன்னின்று செய்திருந்தார். இந்நிகழ்வில், கட்சியின் தமிழகப் பொதுச்செயலாளர் நெல்லை ஜீவா மற்றும் தர்மபுரி மாவட்ட லட்சிய ஜனநாயக கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.



