தமிழ்நாடு
சிவகாசி பள்ளியில் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்ட விரிவாக்கம்: மாணவிகளுடன் உணவருந்தி மகிழ்ந்த கீர்த்தனா!

சிவகாசி: சிவகாசியில் உள்ள சி.இ.நா. பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்ட விரிவாக்க நிகழ்வு சிறப்பாகத் தொடங்கி வைக்கப்பட்டது.
தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், விருதை மகள் கீர்த்தனா கலந்துகொண்டு திட்ட விரிவாக்கத்தை முறைப்படி தொடங்கி வைத்தார். தொடர்ந்து, பள்ளி மாணவிகளுக்கு அன்போடு காலை உணவைப் பரிமாறிய அவர், மாணவிகளுடன் அமர்ந்து உணவருந்தி அவர்களின் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் நேரில் பகிர்ந்துகொண்டார்.
மாணவிகளின் அன்போடும் புன்னகையோடும் கழிந்த இந்த இனிய காலை பொழுது மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சியையும் நிறைவையும் அளித்ததாக அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். இந்நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



