தமிழ்நாடு

காங்கிரஸ் கட்சி மறுசீரமைப்புக் குழுக் கூட்டம்: மாணிக்கம் தாகூர், பீட்டர் அல்போன்ஸ் தலைமையில் ஆலோசனை!

சென்னை:
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சேலம் மாநகரம், திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை தெற்கு மாவட்டங்களுக்கான மறுசீரமைப்புக் குழுக் கூட்டம் சென்னையில் முக்கிய நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மறுசீரமைப்புப் பொறுப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ப. மாணிக்கம் தாகூர் தலைமை தாங்கினார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் மற்றும் மண்டல ஒருங்கிணைப்பாளர் அருள் பெத்தையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சம்பந்தப்பட்ட மாவட்டங்களின் பார்வையாளர்கள் மற்றும் மாவட்ட காங்கிரஸ் கமிட்டித் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில், மாவட்ட வாரியாகக் கட்சி அமைப்பை வலுப்படுத்துவது மற்றும் உட்கட்சி மறுசீரமைப்புப் பணிகளை விரைவாக ஒருங்கிணைத்து செயல்படுத்துவது குறித்து விரிவான ஆலோசனைகளும் முக்கிய வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டன.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன