பிரதமர் மோடி பிறந்தநாள்: புதுச்சேரி வேதபுரீஸ்வரர் கோவிலில் ஆளுநர் கைலாஷ்நாதன் தலைமையில் 1,000 தீபங்கள் ஏற்றி சிறப்பு பூஜை!

புதுச்சேரி: பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாள் மற்றும் அவரது 25 ஆண்டுகால மக்கள் சேவையைக் கொண்டாடும் வகையில், புதுச்சேரி ராஜ்பவன் தொகுதி மகாத்மா காந்தி வீதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ வேதபுரீஸ்வரர் திருக்கோவிலில் சிறப்புப் பூஜைகள் மற்றும் தீப வழிபாடுகள் நடைபெற்றன.
இந்நிகழ்வில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கே. கைலாஷ்நாதன் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தார். அவருடன் சட்டமன்ற உறுப்பினர் வி.பி. இராமலிங்கம் உள்ளிட்ட பிரமுகர்கள் இணைந்து பங்கேற்றனர். தொடர்ந்து திருக்கோவில் வளாகத்தில் பிரதமரின் நல்வாழ்விற்காக ஆயிர விளக்கு தீபங்கள் ஏற்றி மகா தீபாராதனையுடன் வழிபாடு மேற்கொள்ளப்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடி நல்ல உடல் ஆரோக்கியத்துடனும், நீண்ட ஆயுளுடனும் தேசப் பணியாற்றிட வேண்டி இந்தச் சிறப்புப் பிரார்த்தனை நடைபெற்றது. இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு இறைவனை வழிபட்டனர்.

