தந்தை பெரியாரின் 148-வது பிறந்தநாள்: சென்னையில் உள்ள சிலைக்கு அமைச்சர்கள், சபாநாயகர் மலர் தூவி மரியாதை!

சென்னை, செப். 17:
தந்தை பெரியாரின் 148-வது பிறந்த நாளை முன்னிட்டு, தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னை அரசு பன்னோக்கு மருத்துவமனை அருகில் அமைந்துள்ள அவரது திருவுருவச்சிலைக்கு சட்டப்பேரவைத் தலைவர் மற்றும் அமைச்சர்கள் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவின்படி நடைபெற்ற இந்நிகழ்வில், சட்டப்பேரவை தலைவர் ஜே.சி.டி. பிரபாகர், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் N. ஆனந்த், பொதுப்பணி, நெடுஞ்சாலைகள் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் P. வெங்கடரமணன் ஆகியோர் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.
மேலும், பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் ராஜ்மோகன், சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு, நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை அமைச்சர் நெ. மரிய வில்சன், செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் முனைவர் R. குமார் ஆகியோர் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.



