கொளத்தூர் வி.எஸ். பாபு நலமுடன் உள்ளார்: மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வ விளக்கம்!

சென்னை: மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கொளத்தூர் வி.எஸ். பாபு தற்போது நலமுடன் இருப்பதாக அவர் சிகிச்சை பெற்று வரும் தனியார் மருத்துவமனை நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
முன்னதாக, கடந்த 9-ஆம் தேதி திடீரென ஏற்பட்ட மூச்சுத்திணறல் மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக அவர் சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிறப்பு மருத்துவக் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து தொடர் கண்காணிப்பில் வைத்திருந்தனர்.
இந்நிலையில், அவரது உடல்நிலை குறித்து வெளியாகியுள்ள புதிய மருத்துவ அறிக்கையில், வி.எஸ். பாபு நல்ல உடல்நிலையுடன் சீராக தேறி வருவதாகவும், அவரது உடல் உறுப்புகளின் செயல்பாடுகள் திருப்திகரமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் அவர் ஓய்வில் இருந்து வருகிறார்.



