பிரதமர் மோடியின் பிறந்தநாளையொட்டி புதுச்சேரியில் ஒரு மாதம் ‘சேவா சங்கல்ப்’ மக்கள் சேவைத் திட்டங்கள்: பாஜக அறிவிப்பு!

புதுச்சேரி: பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாள் மற்றும் அவர் தொடர்ந்து 25 ஆண்டுகள் மக்கள் சேவையில் செயலாற்றி வருவதைக் கொண்டாடும் வகையில், புதுச்சேரியில் செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 17 வரை ஒரு மாதம் முழுவதும் ‘சேவா சங்கல்ப்’ சேவைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட உள்ளன.
புதுச்சேரி மாநில பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகத்தில் இது தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் மாநிலப் பொறுப்பாளர்கள் முன்னிலையில் சேவை வாரத் திட்டங்கள் குறித்த விவரங்கள் விரிவாக எடுத்துரைக்கப்பட்டன.
பிரதமர் மோடியின் பிறந்தநாளையொட்டி தொடங்கப்படும் இந்த ‘சேவா சங்கல்ப்’ மற்றும் ‘சேவா சப்தா’ முன்னெடுப்புகள் மூலம் பொதுமக்களுக்குப் பயனளிக்கும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் சமூகப் பணிகள் மாநிலம் முழுவதும் ஒரு மாத காலத்திற்குத் தீவிரமாகச் செயல்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

