புதுச்சேரி

ஸ்ரீ பொய்யாத மூர்த்தி விநாயகர் ஆலய உற்சவர் உள்புறப்பாடு: எதிர்க்கட்சித் தலைவர் ஏ.எம்.எச். நாஜிம் தொடங்கி வைத்தார்!

காரைக்கால்: காரைக்காலில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ பொய்யாத மூர்த்தி விநாயகர் ஆலயத்தில், விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு 10 நாட்கள் நடைபெறும் பிரம்மோற்சவ விழா விமரிசையாகத் தொடங்கியது. இவ்விழாவின் முக்கிய நிகழ்வான உற்சவர் உள்புறப்பாடு நிகழ்வு முதன்முறையாக வெகு விமரிசையாக நடைபெற்றது.

இந்த ஆன்மீக வைபவத்தில் புதுச்சேரி சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் காரைக்கால் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஏ.எம்.எச். நாஜிம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, சுவாமி உள்புறப்பாடு நிகழ்வினைத் தொடங்கி வைத்தார். தொடர்ந்து மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு நடைபெற்ற சிறப்பு தீபாராதனைகளில் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தார்.

இந்நிகழ்ச்சியில் கோயில் நிர்வாக அதிகாரி ஆர். சுப்பிரமணியன், முக்கிய பிரமுகர் எஸ். குமாரசிவம் உள்ளிட்ட நிர்வாகிகளும், ஏராளமான ஆன்மீக மெய்யன்பர்களும், பொதுமக்களும் திரளாகக் கலந்துகொண்டு விநாயகப் பெருமானின் திருவருள் பெற்றனர். விழாவுக்கான ஏற்பாடுகளைக் கோயில் நிர்வாகத்தினர் சிறப்பாகச் செய்திருந்தனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன