புதுச்சேரி

புதுச்சேரி: தவறவிட்ட ரூ.41 லட்சம் மதிப்பிலான 260 செல்போன்கள் மீட்பு; உரிமையாளர்களிடம் ஒப்படைத்தது காவல்துறை!

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் பொதுமக்கள் பல்வேறு இடங்களில் தவறவிட்ட சுமார் ரூ.41 லட்சம் மதிப்பிலான 260 செல்போன்களை சைபர் கிரைம் போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு மீட்டுள்ளனர். மீட்கப்பட்ட செல்போன்கள் உரிய ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு உரிமையாளர்களிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டன.

புதுச்சேரி கோரிமேட்டில் உள்ள போலீஸ் சமுதாயக் கூடத்தில் இதற்கான சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சீனியர் எஸ்பி ராகவ் கலந்துகொண்டு, செல்போன்களை உரிய உரிமையாளர்களிடம் நேரில் வழங்கினார். தொலைந்துபோன செல்போன்கள் மீண்டும் கிடைத்ததால் பொதுமக்கள் நெகிழ்ச்சியடைந்து காவல்துறையினருக்குத் தங்களது நன்றியைத் தெரிவித்தனர்.

பொதுமக்கள் தங்களது செல்போன்களைத் தவறவிட்டாலோ அல்லது காணாமல் போனாலோ உடனடியாக அருகிலுள்ள காவல் நிலையத்திலோ அல்லது சைபர் கிரைம் போலீசாரையோ அணுகிப் புகார் அளிக்குமாறு காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன