புதுச்சேரி

தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல்: தேர்தல் செலவின கண்காணிப்பு குறித்து தலைமைத் தேர்தல் அதிகாரி தலைமையில் முக்கிய ஆலோசனைக் கூட்டம்!

புதுச்சேரி: புதுச்சேரி தட்டாஞ்சாவடி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, தேர்தல் செலவினங்களைக் கண்காணிப்பது தொடர்பான விரிவான ஆய்வுக் கூட்டம் தேர்தல் துறை சார்பில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு புதுச்சேரி தலைமைத் தேர்தல் அதிகாரி ஏ.எஸ்.பி.எஸ். ரவிபிரகாஷ் தலைமை தாங்கி தேர்தல் முன்னேற்பாடுகளை ஆய்வு செய்தார்.

இடைத்தேர்தல் களத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் மேற்கொள்ளும் தேர்தல் செலவினங்களை தேர்தல் ஆணையத்தின் விதிகளுக்கு உட்பட்டு முறைப்படி கண்காணிப்பது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. தேர்தல் நடத்தை விதிகளைத் தீவிரமாக அமல்படுத்தவும், முறைகேடான பணப்பட்டுவாடா மற்றும் பரிசுப் பொருட்கள் விநியோகத்தைத் தடுக்கவும் பறக்கும் படைகள் மற்றும் கண்காணிப்புக் குழுக்கள் தீவிரமாகச் செயல்பட அறிவுறுத்தப்பட்டது.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட ஆட்சியருமான அ. குலோத்துங்கன் மற்றும் பல்வேறு அரசுத் துறை உயர் அதிகாரிகள், தேர்தல் செலவினப் பிரிவு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன