புதுச்சேரி

லயன்ஸ் கிளப் சார்பில் ஆசிரியர் தினம் மற்றும் கலாச்சார விழா: வி.பி.இராமலிங்கம் பங்கேற்பு!

புதுச்சேரி: புதுச்சேரி வைஷாலி வீதியில் உள்ள சொசைட்டி புரோகிரசிவ் அரசு உதவி பெறும் உயர்நிலைப் பள்ளியில், லயன்ஸ் கிளப் ஆஃப் பாண்டிச்சேரி சென்ட்ரல் சார்பாக ஆசிரியர் தினம் மற்றும் பள்ளி மாணவர்களின் கலாச்சார விழா கோலாகலமாக நடைபெற்றது.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக வி.பி.இராமலிங்கம் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்தார். தொடர்ந்து, பள்ளி மாணவ, மாணவிகளின் கண்கவர் கலை மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பைப் போற்றும் வகையில் சிறப்பு நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

நிகழ்ச்சியில் பேசிய வி.பி.இராமலிங்கம், எதிர்காலத் தூண்களாகத் திகழும் மாணவர்களைச் செதுக்கும் ஆசிரியர்களின் தன்னலமற்ற சேவையை வெகுவாகப் பாராட்டினார். மேலும், திறமைகளை வெளிப்படுத்திய மாணவச் செல்வங்களையும், ஆசிரியர்களையும் பாராட்டி தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். இவ்விழாவில் பள்ளி ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் மற்றும் லயன்ஸ் சங்க நிர்வாகிகள் பலர் திரளாகக் கலந்துகொண்டனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன