புதுச்சேரி

புதுச்சேரி சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரலை செய்ய வேண்டும்: தற்காலிக சபாநாயகரிடம் எம்.எல்.ஏ. ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் மனு!

புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டத்தொடர் நிகழ்வுகளை பொதுமக்கள் நேரடியாக பார்க்கும் வகையில் நேரலை செய்ய வேண்டும் என்று தற்காலிக சபாநாயகர் அன்பழகனிடம் சட்டமன்ற உறுப்பினர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் நேரில் சந்தித்து மனு அளித்துள்ளார்.

புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் தற்காலிக சபாநாயகர் அன்பழகனை சந்தித்த எம்.எல்.ஏ. ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் (JCM), பேரவை நடவடிக்கைகளில் முழுமையான வெளிப்படைத்தன்மையை கொண்டுவரும் வகையில் அவையின் அனைத்து விவாதங்களையும் நேரலையாக ஒளிபரப்ப உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். மக்கள் பிரதிநிதிகள் அவையில் மக்கள் பிரச்சனைகளை எவ்வாறு எழுப்புகிறார்கள் என்பதை பொதுமக்களும் தெரிந்துகொள்ள இது அவசியமானது என்று அவர் குறிப்பிட்டார்.

மேலும், கடந்த தேர்தல் காலகட்டத்தின் போது பதிவு செய்யப்பட்ட தேர்தல் தொடர்பான வழக்குகளை முழுமையாக பரிசீலித்து ரத்து செய்ய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தனது மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார். மனுவைப் பெற்றுக்கொண்ட தற்காலிக சபாநாயகர், இந்தக் கோரிக்கைகள் குறித்து ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன