புதுச்சேரி

அரசு வேலை எழுத்துத் தேர்வில் புதுச்சேரி சார்ந்த பாடத்திட்டம்: எம்.எல்.ஏ. விக்னேஷ் கண்ணன் சட்டசபையில் வலியுறுத்தல்!

புதுச்சேரி, ஆக. 29: புதுச்சேரி இளைஞர்கள் அரசு வேலைவாய்ப்புகளை எளிதாகப் பெறும் வகையில், அரசு போட்டித் தேர்வுகளின் பாடத்திட்டத்தில் புதுச்சேரி சார்ந்த வினாக்களை முக்கிய அம்சமாகச் சேர்க்க வேண்டும் என்று சட்டமன்ற உறுப்பினர் விக்னேஷ் கண்ணன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக சட்டசபையில் பேசிய அவர், எல்.டி.சி. (LDC), யூ.டி.சி. (UDC), உதவியாளர் மற்றும் ஏ.என்.எம். (ANM) உள்ளிட்ட பல்வேறு அரசுப் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வுகளில் புதுச்சேரியின் வரலாறு, புவியியல், நிர்வாக அமைப்பு, உள்ளூர் சமூக மற்றும் பண்பாட்டு அம்சங்கள் தொடர்பான கேள்விகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். இதன்மூலம் உள்ளூர் இளைஞர்கள் தேர்வுகளுக்குத் தகுந்த வகையில் தயாராகவும், அரசுப் பணிகளில் கூடுதல் வாய்ப்புகளைப் பெறவும் வழிவகுக்கும் என்று சுட்டிக்காட்டினார்.

மேலும், போட்டித் தேர்வுகளில் புதுச்சேரி பாடத்திட்டத்தை ஒரு தனித்துவமான பகுதியாக இணைக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதன்மூலம் தேர்வர்களின் உள்ளூர் அறிவு மற்றும் மாநிலம் சார்ந்த நிர்வாக விழிப்புணர்வை மதிப்பீடு செய்ய இயலும் என்றும் அவர் கூறினார். புதுச்சேரி இளைஞர்களுக்கு அரசுப் பணிகளில் உரிய பங்களிப்பை உறுதி செய்வதற்காக இக்கோரிக்கையை அரசு உடனடியாகப் பரிசீலித்து நடைமுறைப்படுத்த வேண்டும் என எம்.எல்.ஏ. விக்னேஷ் கண்ணன் கேட்டுக்கொண்டார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன