புதுச்சேரி

நேபாளத்தில் தவிக்கும் புதுச்சேரி பெண் பக்தர்களை மீட்கக் கோரி மத்திய அரசுக்கு அமைச்சர் நமச்சிவாயம் அவசர கடிதம்!

புதுச்சேரி: நேபாள நாட்டிற்கு ஆன்மிகச் சுற்றுலா சென்று அங்கு சிக்கித் தவித்து வரும் புதுச்சேரியைச் சேர்ந்த பெண் பக்தர்களைப் பத்திரமாக மீட்டு அழைத்து வர உடனடி நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்கு புதுச்சேரி உள்துறை அமைச்சர் ஏ. நமச்சிவாயம் கடிதம் எழுதியுள்ளார்.

புதுச்சேரியைச் சேர்ந்த பெண் பக்தர்கள் குழுவினர் நேபாளத்திற்கு ஆன்மிகப் பயணம் மேற்கொண்டனர். அங்கு நிலவி வரும் சூழல் மற்றும் போக்குவரத்து பாதிப்புகள் காரணமாக, அவர்கள் நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். தங்களை மீட்கக் கோரி அவர்கள் விடுத்த தகவலை அடுத்து, அவர்களது குடும்பத்தினர் புதுச்சேரி அரசிடம் உதவி கோரி முறையிட்டனர்.

இதனைத் தொடர்ந்து, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு அமைச்சர் நமச்சிவாயம் அவசரக் கடிதம் அனுப்பியுள்ளார். அதில், நேபாளத்தில் உள்ள இந்திய தூதரகம் மூலம் அங்கு தவிக்கும் புதுச்சேரி பெண்களுக்குத் தங்குமிடம், உணவு மற்றும் பாதுகாப்பு உதவிகளை உடனடியாக வழங்க வேண்டும் என்றும், அவர்களைப் பத்திரமாக தாயகம் அழைத்து வர விரைவான மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன