புதுச்சேரி

அரியாங்குப்பத்தில் மின்தடை: சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்த எம்.எல்.ஏ. கா. ஐயப்பன்!

புதுச்சேரி, ஆக. 27:

புதுச்சேரி அரியாங்குப்பம் பகுதியில் ஏற்பட்ட திடீர் மின்தடை குறித்து தகவல் கிடைத்த உடனேயே, அரியாங்குப்பம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கா. ஐயப்பன் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.

அரியாங்குப்பம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மின்தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாயினர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் எம்.எல்.ஏ. கா. ஐயப்பனுக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் அவர் உடனடியாக களத்திற்கு விரைந்து சென்று பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளை பார்வையிட்டு, நிலைமையை தீவிரமாக ஆய்வு செய்தார்.

இதனைத் தொடர்ந்து, மின்துறை அதிகாரிகளுடன் உடனடியாக தொடர்பு கொண்டு பேசிய சட்டமன்ற உறுப்பினர், மின்தடைக்கான காரணங்களை கண்டறிந்து பொதுமக்கள் சிரமமின்றி மின் விநியோகம் உடனடியாக சீரடைவதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். எம்.எல்.ஏ.வின் உடனடி கள ஆய்வும் துரித நடவடிக்கையும் தொகுதி மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன