புதுச்சேரி

புதுச்சேரி: 18 பயனாளிகளுக்கு வீடு கட்ட ரூ.33.30 லட்சம் நிதி – எம்.எல்.ஏ ரவிக்குமார் வழங்கினார்!

வீடு கட்டுவதற்கான 2ம் கட்ட தவணை தொகை: ரவிக்குமார் எம்எல்ஏ வழங்கினார்

புதுச்சேரி (ஆகஸ்ட் 28):
புதுச்சேரி ஆதிதிராவிடர் நலன் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் ஆதிதிராவிடர் பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான தவணை தொகைகள் வழங்கப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக வில்லியனூர் தொகுதியை சேர்ந்த ஆதிதிராவிடர் பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான 2ம் கட்ட தவணை தொகை பெறுவதற்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி வில்லியனூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடந்தது.

இதில் வில்லியனூர் தொகுதி எம்எல்ஏ ரவிக்குமார் கலந்து கொண்டு 18 பயனாளிகளுக்கு தலா ரூ.1 லட்சத்து 85 ஆயிரம் வீதம் ரூ.33 லட்சத்து 30 ஆயிரம் பெறுவதற்கான ஆணையை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரி ஜெயலட்சுமி மற்றும் என்.ஆர். காங்கிரஸ் பிரமுகர்கள், ஊர் முக்கியஸ்தர்கள், பயனாளிகள் என பலர் கலந்து கொண்டனர்

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன