தமிழ்நாடு

மானசரோவர் யாத்ரிகர்கள் நலமுடன் நாடு திரும்ப தருமபுரம் ஆதீனத்தில் சிறப்பு கூட்டுப் பிரார்த்தனை

மயிலாடுதுறை: கைலாஷ் மானசரோவர் யாத்திரை மேற்கொண்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள், நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் இயற்கை சீற்றத்தில் சிக்கி பலர் உயிரிழந்ததும், பலர் குறித்த தகவல்கள் கிடைக்காமல் இருப்பதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், யாத்ரிகர்கள் நலம்பெற வேண்டி மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தில் சிறப்பு கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்றது.

மயிலாடுதுறையைச் சேர்ந்த முன்னாள் நீதியரசர் திரு. சிவஞானம், மலேசியாவைச் சேர்ந்த 51 பக்தர்கள், ஈஷா யோகா மையத்தைச் சேர்ந்த 80 அன்பர்கள் மற்றும் கும்பகோணம், தஞ்சாவூர், சிதம்பரம் உள்ளிட்ட பல்வேறு நகரங்களைச் சேர்ந்த பலநூற்றுக்கணக்கானோர் இந்த யாத்திரையில் பங்கேற்றுள்ளனர்.

இவர்களில் பலர் குறித்த தகவல்கள் தற்போது தொடர்ந்து வந்தவண்ணம் உள்ளன.இயற்கை பேரிடரில் உயிரிழந்த பக்தர்களின் ஆன்மா சாந்தியடையவும், அங்கு சிக்கித் தவிக்கும் அனைவரும் எவ்வித பாதிப்புமின்றி பாதுகாப்பாகவும் நலமுடனும் தங்களது இல்லங்களுக்கும், சொந்த நாடுகளுக்கும் திரும்பிடவும் தருமபுரம் ஆதீன சொக்கநாதர் பூசை மடத்தில் சிறப்பு கூட்டுப் பிரார்த்தனை செய்யப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டன.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன