சென்னையில் உலகிலேயே முதன்முறையாக நுண்துளை கருவிழி சீரமைப்பு மையம்: முதல்வர் திறந்து வைத்தார்!

சென்னை, ஆக. 27: சென்னை ஆழ்வார்பேட்டையில் அமைந்துள்ள டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனையில், உலகிலேயே முதன்முதலாக அமைக்கப்பட்டுள்ள நுண்துளை கருவிழி சீரமைப்பு மையத்தை (Pinhole Pupilloplasty Centre) தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் இன்று முறைப்படி திறந்து வைத்தார்.
கண் மருத்துவ சிகிச்சை முறையில் அதிநவீன தொழில்நுட்பங்களை வழங்கி வரும் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை வளாகத்தில் இந்த புதிய பிரத்யேக மையம் தொடங்கப்பட்டுள்ளது. கண் பார்வை குறைபாடுகள் மற்றும் சிக்கலான கருவிழி பாதிப்புகளை நவீன முறையில் சரிசெய்யும் அதிநவீன உபகரணங்கள் மற்றும் கட்டமைப்பு வசதிகள் இம்மையத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
உலக அளவில் இத்தகைய மேம்பட்ட நுண்துளை கருவிழி சீரமைப்பு மையம் முதன்முறையாக சென்னையில் தொடங்கப்பட்டிருப்பது தமிழகத்தின் மருத்துவக் கட்டமைப்புக்கு கூடுதல் பெருமை சேர்த்துள்ளது. இந்த தொடக்க விழாவில் கண் மருத்துவ நிபுணர்கள், மருத்துவமனை நிர்வாகிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.


